கனடாவில் போராட்டத்தில் குதித்த அரச ஊழியர்கள்

கனடாவின் கியூபெக்கில் சுமார் நான்கு லட்சம் அரச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் கியூபெக் மாகாண அரசாங்கம் உரிய முறையில் செவிசாய்க்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
கனடாவில் வாடகை தொகை அதிகரிப்பு

கனடாவில் சராசரி வாடகை தொகை 2149 டாலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது மாதாந்த வாடகை தொகை 1.5 விதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் வருடாந்த அடிப்படையில் 11.1 விதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடுகளுக்கான வாடகை தொகை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் சராசரியாக 15 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு […]