3 அம்சங்களைக் கடைப்பிடித்து 20 கிலோ எடை குறைத்தேன்: இயக்குநர் மதுமிதா பகிர்வு

3 அம்சங்களைக் கடைப்பிடித்து 20 கிலோ எடை குறைத்தேன்: இயக்குநர் மதுமிதா பகிர்வு

ஊரடங்கு காலத்தில் 20 கிலோ உடல் எடையைக் குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் இயக்குநர் மதுமிதா.

கரோனா ஊரடங்கு காலத்தில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கினார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் முழுக்க உடற்பயிற்சி தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும்தான் காண முடிந்தது.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் இயக்குநர் மதுமிதா. கரோனா ஊரடங்கு தொடங்கிய சமயத்தில் அவர் இயக்கி வெளியான ‘கே.டி’ படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துவிட்டுப் பலரும் பாராட்ட அவர்களுக்குத் தொடர்ச்சியாக நன்றி தெரிவித்து வந்தார்.

மேலும், தனது உடல் எடையைக் குறைக்கவும் பயிற்சிகளைத் தொடங்கினார். மார்ச் மாதம் தொடங்கி, இப்போது வரை 20 கிலோ குறைத்துவிட்டார். மார்ச் மாதத்தில் எப்படி இருந்தேன், இப்போது எப்படி இருக்கிறேன் என்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்.

ட்விட்டரில் அவரைப் பின் தொடர்பவர்கள் பலரும், அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கத் தொடங்கினர். மேலும், எவ்வாறு இந்த அளவுக்கு உடல் எடையைக் குறைத்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்கள்.

அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் மதுமிதா கூறியிருப்பதாவது:

“மிக்க நன்றி! இதுதான் நான் செய்தது. ஆனால் இது அனைவருக்கும் கைகொடுக்காமல் போகலாம். ஏனெனில் நம் ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது.

  1. வீட்டில் சமைத்த உணவு மட்டுமே. வெளியில் சாப்பிடக் கூடாது.
  2. தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி.
  3. கலோரி கணக்கீடு. கணக்கிட்டுச் சாப்பிட வேண்டும்.

உங்கள் அனைவரது ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கும் மீண்டும் நன்றி”.

இவ்வாறு இயக்குநர் மதுமிதா தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles