300 நாள் வேல! இல்லையேல் வெளியேறு ! உங்க பீலாவுக்கு அஞ்ச மாட்டோம் !! செந்தில் தொண்டமான்

300 நாள் வேல! இல்லையேல் வெளியேறு ! உங்க பீலாவுக்கு அஞ்ச மாட்டோம் !! செந்தில் தொண்டமான்

சம்பள நிர்ணய சபை ஊடாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வேலை நாட்களைக் குறைக்க அனுமதிக்க முடியாது என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பெச்சாளர் ரொஷான் ராஜதுரையின் கருத்திற்கு பதிலடியாக செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது என்றும் வருடத்தில் 300 நாட்கள் வேலை வழங்க முடியாது என்றால், தோட்டக் கம்பனிகளிடமிருந்து 300 நாட்கள் எவ்வாறு வேலையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்குத் தெரியும் என்றும் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. முதலாளிமாரின் இவ்வாறான கடும்போக்கான செயற்பாடுகளே இன்று தொழிலாளர்களுக்கும், முகாமையாளர்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கியுள்ளன.

தற்போது இதுதொடர்பான முறைப்பாடுகள் பிரதமர், ஜனாதிபதி வரை எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றுக்கு கம்பனிகளே காரணமாகும். எனவே, தொழிலாளர்களுக்கு உரிய முறையில் வேலை நாட்களை வழங்க வேண்டியது கம்பனிகளின் பொறுப்பாகும். இல்லையெனில், வேலை வழங்காத நாட்களில் தோட்ட முகாமையாளர்கள் கொழும்பிலேயே இருந்து கொள்வது உகந்ததாக இருக்கும். கம்பனி பக்கம் தவறுகளை வைத்துக் கொண்டு அவற்றை தொழிலாளர் மீது திணிக்கக் கூடாது. தொழிலாளர் உரிமைகள் பறிபோவதை இ.தொ.கா வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்காது என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கிறோம்.. என்று செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்


administrator

Related Articles