40 வயதான பிரெஞ்சு-கனடாவின் கணினி விஞ்ஞானியான வாலி

40 வயதான பிரெஞ்சு-கனடாவின் கணினி விஞ்ஞானியான வாலி

உக்ரைன் மீது ரஷியா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகிறது.
ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடத்து வரும் போரில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான ‘வாலி’ போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு ரஷியப் படைகளுக்கு எதிராக போரிட வந்துள்ளார்.

40 வயதான பிரெஞ்சு-கனடாவின் கணினி விஞ்ஞானியான வாலி, 2009 மற்றும் 2011 க்கு இடையில் இரண்டு முறை ஆப்கானிஸ்தான் போரில் பணியாற்றியுள்ளார். வாலி உலகின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், அவர் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்த போது அரபு மொழியில் பாதுகாவலர் என்று பொருள்படும் “வாலி” என்ற பெயரைப் பெற்றார்.

கடந்த புதன்கிழமை உக்ரைனுக்கு வந்த கனடாவின் 22 வது படைப்பிரிவின் மூத்த வீரரான வாலி இரண்டு நாட்களில் ஆறு ரஷிய வீரர்களைக் கொன்றதாகவும் அவரால் ஒரு நாளைக்கு சுமார் 40 பேரை சுட்டு வீழ்த்த முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், “நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன், ஏனென்றால் இங்கு மக்கள் ஐரோப்பியராக இருக்க வேண்டும் என்பதற்காக குண்டுவீச்சுக்கு ஆளாகிறார்கள், அவர்கள் ரஷியாவிற்கு எதிராக போராட வேண்டும்”. என்று கூறியுள்ளார்

administrator

Related Articles