40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மன்னார் சம்பியன்!!

40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மன்னார் சம்பியன்!!

மூத்த செய்தியாளர் வாஸ் கூஞ்ஞ

நாற்பது வயதுக்கு மேற்பட்ட கிரிக்கட் வீரர்களுக்கான 25 ஓவர் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வமான விளையாட்டுப் போட்டியானது மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட வீரர்களுக்கிடையே திங்கள் கிழமை (07.12.2020) வவுனியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் மன்னார் அணியினர் 82 ஓட்டங்களால் வவுனியா அணியினரை தோற்கடித்துள்ளனர். மன்னார் அணி 8 விக்கட் இழப்புக்கு 169 ஓட்டங்களையும், வவுனியா அணியினர் 10 விக்கட் இழப்புக்கு 87 ஓட்டங்களையும் பெற்றியிருந்தனர்.

இதில் மன்னார் அணியைச் சார்ந்த றொசான் 53 ஓட்டங்களையும், nஐரோமி 29 ஓட்டங்களையும் அதிகமாக பெற்று தங்கள் அணிக்கு வலுவை ஈட்டிக் கொடுத்திருந்தனர்.

இதில் மன்னார் அணியினைச் சார்ந்த Nஐம்ஸ் 18 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்களையும், அருள் 16 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்களையும், பஸ்மி 22 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles