அமெரிக்க – கனடா எல்லையூடானபயண தடை நவ 21 வரை நீடிப்பு!

அமெரிக்க – கனடா எல்லையூடானபயண தடை நவ 21 வரை நீடிப்பு!

அமெரிக்காவிற்கும் கனடாவிற்குமான எல்லை ஊடாக பயணம செய்யும் தடையை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை நீடிக்க இரண்டு அரசாங்கங்களும் தீர்மாணித்துள்ளன.

முன்னர் எதிர்வரும் புதன்கிழமை எல்லைகளை திறந்து போக்குவரத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் தீர்மானித்து இருந்தது.

ஆனால் தற்போதைய கொவிட் பரவல் அதிகமானதை தொடர்ந்து தடையை தொடர்ந்தும் நவம்பர் 21 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்தாக கனேடிய மக்கள் பாதுகாப்பு அமைச்சரான பில் பிளேயர் தனது டூவிட்டரில் கூறியுள்ளார்.

ஆயினும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் வழமை போல இடம்பெறும். அத்துடன் கனேடிய பிரஜைகளுக்கு கனடா உள்ளே வர கனடா அரசாங்கம் இந்த மாத ஆரம்பத்தில் அனுமதி வழங்கி இருந்தது.

அதேபோன்று எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சர்வதேச மாணவர்களுக்கு கனடா வர அனுமதி வழங்ப்பட்டுள்ளது.

administrator

Related Articles