54 வயது மைக் டைசனின் “குத்தும்” 51 வயது ரோயின் “சண்டையும்” Draw ஆனது!

54 வயது மைக் டைசனின் “குத்தும்”   51 வயது ரோயின்   “சண்டையும்”  Draw ஆனது!

உலக குத்து சண்டை ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த முன்னாள் உலக குத்து சண்டை சம்பியன் 54 வயதான மைக் டைசன் மற்றுமொரு சம்பியனான 51 வயது ரோய் ஜோன்ஸ் ஜூனியர இடையிலான குத்து சண்டை போட்டி நேற்று பார்க்க கூடியதாக இருந்தது.

இரண்டு குத்துசண்டை ஜாம்பவான்களும் மோதிய இந்த போட்டிக்கு சுதந்திர நடுவர்களே நடுவர்களாக இருந்தார்கள்.

ஒரு சுற்று 2 நிமிடம் பிரகாரம் 8 சுற்றுக்கள் நடந்த இந்த போட்டியில் இருவருமே 76 புள்ளிகளை பெற்றனர்.இதன் பிரகாரம் போட்டி டிராவில் முடிந்தது.

ஆனாலும் போட்டி விமர்சகர்கள் டைசன் இன்னும் இளமையாக இருக்கிறார். ரோய் ஜோன்ஸ்க்கு இது சவாலாக அமைந்தது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இது ஒரு கண்காட்சி போட்டி என்றபடியால் இருவருமே நல்ல தேக ஆரோக்கியத்தோடு இருப்பதை விளையாட்டு ரசிகர்கள் வரவேற்று இருக்கிறார்கள்.

இந்த போட்டி மூலம் கிடைக்கும் பணத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு டைசன் உதவி செய்ய இருக்கிறார் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு விளையாடிய டைசனும் ரோய் ஜோன்ஸ் சொன்ன கருத்துகளை பாருங்க

administrator

Related Articles