8 வது விக்கெட்டில் இலங்கையை பின்னுக்கு தள்ளிய மே.தீவுகள் அணி ! முதல் இன்னிங்ஸில் 8 / 268 ஓட்டங்கள், லக்மால் 45/ 5 விக்கெட்டுகள்!!

8 வது விக்கெட்டில் இலங்கையை பின்னுக்கு தள்ளிய மே.தீவுகள் அணி ! முதல் இன்னிங்ஸில் 8 / 268 ஓட்டங்கள்,   லக்மால் 45/ 5 விக்கெட்டுகள்!!

இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையில் சேர் விவியன் ரிட்சர்டஸ் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது மேற்கிந்திய தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்களை விட மேலதிகமாக 99 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்ட நேர முடிவின் போது ரக்கிம் கோர்ன்வோல் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களோடு இருக்கிறார். இவர் பெற்ற முதலாவது அரைச்சதம் இதுவகும்

இன்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸில் ஆட வந்த மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்று இருந்தது.

இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து திறமையாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுரங்க லக்மால் வீசிய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினார்கள்.

இதன்படி ஆரம்ப விக்கெட் 13 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது. அதன்பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது.

ஆனால் 8 விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரக்கிம் கோர்ன்வோல் மற்றும் ஜோசுவா டி சில்வா இலங்கை அணிக்கு தலைவலியை கொடுத்தார்கள்.

அவர்கள் இருவரும் இணைந்து இணைப்பாட்டமாக 89 ஓட்டங்களை பகிர்ந்தார்கள் . அவர்கள் இருவரும் ஆடிய ஒன்றிணைந்து மேற்கிந்திய தீவுகள் அணியை ஸ்தரமான இடத்திற்கு கொண்டு சென்றார்கள்.

எவ்வாறியினும் இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளரான சுரங்க லக்மாலை பாரட்டாமல் இருக்க முடியாது அவர் திறமையாக பந்து வீசி விக்கெட்டுகளை 45 ஓட்டங்களுக்கு கைப்பற்றினார்.

ஸ்கோர் விபரம்

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் இதுவரை 8 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள்.(ஜோன் கெம்பல் 42, போனர் 45 , டி சில்வா 46 , ரக்கிம் கோர்ன் வோர்ல் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்கள் பந்து வீச்சில் லக்மால் 45/5, துஷ்மித்த சமிர 71/2, எம்புல்தெனிய 64/1)

முன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

administrator

Related Articles