இந்தியாவா கொக்கா?

இந்தியாவா கொக்கா?

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கமைய 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளன.

மெல்பேனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்டில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா தமது முதல் இனிங்சில் 195 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அவுஸ்திரேலியா சார்பில் லபுசென் 48 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுக் கொள்ள இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா 4 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கு தமது முதுலாம் இனிங்சில் பதிலளித்த இந்தியா அணித் தலைவர் ரகானே பெற்ற 112 ஓட்டங்களின் உதவியுடன் 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சில் மிச்செல் ஸ்டாக் மற்றும் நெதன் லெயோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனை அடுத்து தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 200 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்படி இந்திய அணிக்கு 70 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதனை இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு கடந்து வெற்றிப்பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக அஜன்கே ரகானே தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி சிட்னியில் இடம்பெறவுள்ளது.

administrator

Related Articles