கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் விடுவிக்கப்படவுள்ள பகுதிகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல பகுதிகள் நாளை (04) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளன.

நாளை (04) முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம் பொலிஸ் பிரிவு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்கடை மேற்கு, புதுக்கடை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள், பொரளை பொலிஸ் பிரிவின் வணாத்தமுல்லை கிராம சேவகர் பிரிவு மற்றும் மிரிஹானை பொலிஸ் பிரிவின் தமிழ் தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை (04) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடை பொலிஸ் பிரிவின் பேலியகொடைவத்தை, மீகஹவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவின் ரோஹண விகாரை மாவத்தை, பேலியகொடை கங்கபட கிராம சேவகர் பிரிவின் நெல்லிகஹவத்தை, பூரணகொடவத்தை ஆகிய பகுதிகளும் நாளை அதிகாலை 05 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் விலேகொட வடக்கு – கிராம சேவகர் பிரிவின் ஶ்ரீ ஜெயந்தி மாவத்தை பகுதியிலும் நாளை (04) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் ஏனைய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலானது தொடர்ந்தும் அமுலிலிருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles