தமிழகத்தில் பொது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சைதாப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர் ஓய்வு அறையை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், ஆனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் முக‌க் கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறையே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முக‌க்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Jesudasan

Related post