துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற சாதனைகள்: ஸ்டாலின்

 முதல்மைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டசபையில்  மு.க.ஸ்டாலின்  உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“இந்த ஓராண்டு மக்களுக்காக உண்மையாக உளமாற உழைத்தேன். துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம்.தமிழக மக்களுக்கு உண்மையாக உழைத்திருக்கிறேன் என்ற மனநிறைவு உள்ளது. திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத மாவட்டங்களே இல்லை என்ற நிலை உள்ளது 

ஆட்சிப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி; எங்கோ ஒரு மூலையிலிருந்து, இங்கு என்னை நிற்க வைக்கும் திமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். நான் கலைஞர் அல்ல, அவரை போல் எனக்கு பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் அவரை போல் உழைக்க தெரியும். இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்”

Jesudasan

Related post