எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக உயர்வு

 கனடாவில் எரிவாயு விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

நாடு முழுவதிலும் எரிவாயுவின் விலை பெருமளவில் உயர்வடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை சராசரியாக 197.4 சதங்களாக பதிவாகியுள்ளது. இது வரலாறு காணாத அளவில் உயர்வடைந்துள்ளது.

வான்கூவாரில் சராசரியாக ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 2.23 டொலர்களாக காணப்படுகின்றது.

ரஸ்யா – உக்ரேய்ன் போர் காரணமாக எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Annachi News

Related post