ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

IPL தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

ரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பாக ஆடி 50 ரன்னும், தேவ்தத் படிக்கல் 48 ரன்னும் எடுத்தனர்.

டெல்லி சார்பில் சேட்டன் சகாரியா, அன்ரிச் நோர்ஜே, மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

இறுதியில், டெல்லி அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இது டெல்லி அணிபெற்ற 6-வது வெற்றி ஆகும்.

Jesudasan

Related post