அட்டன் நகரின் தற்போதைய நிலை

நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை அடுத்து மலையகத்தில் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது.

சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், கடை தொகுதிகள் என்பன திறக்கப்பட்டு இருப்பதையும் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் மும்முரமாக ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளைக் காலை 6 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (12) அறிவித்தமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

Jesudasan

Related post