செய்தி சேகரிக்க சென்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் 500 ரூபாய்

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பைல்களில் ரூ.500 கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை பாரதியார் பல்கலை, 37வது பட்டமளிப்பு விழா இன்று (மே 13) நடக்கிறது. தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார். இப்பட்டமளிப்பு விழாவில், பி.எச்டி., பட்டம் 1687 பேருக்கும், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கத்தையும் நேரடியாக பெறுகின்றனர்.

இந்த நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவிற்கு செய்தி சேகரிக்க சென்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல்கலை சார்பில் வழங்கப்படும் பைல்களில் ஒரு கவரில் 500 ரூபாய் நோட்டை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர் பங்கேற்கும் விழாவில் 500 ரூபாய் கொடுத்துள்ள நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Annachi News

Related post