இரு முறை பிரதமர் பதவி போதும்

குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சியை சேர்ந்த பெரிய தலைவர் ஒருவர் சில பிரச்னைகள் தொடர்பாக என்னை சந்தித்தார். அவர் அரசியல் ரீதியாக என்னை எதிர்த்தாலும், நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன்.

அவர் என்னைப் பார்த்து, ‘இந்தியா உங்களை இரு முறை பிரதமராக அமர்த்தியுள்ளது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்’ என கேட்டார். அதாவது, ஒருவர் இருமுறை பிரதமர் பதவி வகித்தால், அவர் அனைத்தையும் சாதித்து விட்டதாக அவரது எண்ணம். மோடி வித்தியாசமானவர் என்பது அவருக்குத் தெரியாது. நான் ஓய்வெடுக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

மோடி, எதிர்க்கட்சி தலைவர் பெயரை நேரடியாக தெரிவிக்கவில்லை என்ற போதிலும், சமீபத்தில் அவரை தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Annachi News

Related post