கட்டாய முகக் கவச கோரிக்கை நிராகரிப்பு

பாடசாலைகள் உள்ளிட்ட சில இடங்களில் முகக் கவசம் அணிவதனை கட்டாயமாக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் பிரதம மருத்துவ அதிகாரி கய்ரோன் மூரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சிலர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

பாடசாலைகள், மருந்தகங்கள் மற்றும் ஏனைய பணியிடங்கள் என்பனவற்றில் முகக் கவசம் அணிவதனை கட்டாயமாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கோவிட் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும், முகக் கவசம் அணிவதற்கான அவசியமில்லை எனவும் டொக்டர் மூர் தெரிவித்துள்ளார்.

Annachi News

Related post