டி.ஆர்.எஸ் பாதகத்தை ஏற்படுத்தியது – பிளமிங்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் DRS இல்லாமல்போனது பாதகத்தை ஏற்படுத்தியதாக சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

IPL தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3வது வெற்றியை பெற்றது. 

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அற்று போனது.

இந்த ஆட்டத்தில் முதல் 10 பந்துகள் வரை டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் (நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை) வேலை செய்யவில்லை.

மைதானத்தில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டது. 

இது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ‘அந்த நேரத்தில் டி.ஆர்.எஸ். முறை இல்லாமல் போனது சற்று துரதிருஷ்டவசமானதாகும். இதனால் நாங்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தோம். ஆனால் இது விளையாட்டில் ஒரு அங்கமாகும். தொடக்கத்தில் டி.ஆர்.எஸ். இல்லாதது எங்களுக்கு பாதகமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இருப்பினும் நாங்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்து இருக்க வேண்டும். நிச்சயமாக நாங்கள் நல்ல தொடக்கம் காணவில்லை’ என்றார்.

Jesudasan

Related post