உயிர் காக்க அரசாங்க உதவியை நாடும் றொரன்டோ பெண்

மிகவும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது உயிரை காத்துக் கொள்வதற்கு ஒன்றாரியோ அரசாங்கத்திடம் உதவியை நாடியுள்ளார்.

தனது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கான மருத்துவ செலவுகள் மிகவும் அதிகம் எனவும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய உதவுமாறும் கோரியுள்ளார்.

றொரன்டோவைச் சேர்ந்த 39 வயதான நவுமா ஹமாஸ் என்ற பெண்ணே இவ்வாறு உதவி கோரியுள்ளார்.

தமது உயிர் மெதுவாக பிரிந்து செல்வதாகவும் உயிர் வாழ்வதற்கு கூடுதல் அளவில் செலவிட நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான ஓர் சிகிச்சை முறைமையை இதுவரையில் குறித்த பெண்ணினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Annachi News

Related post