ஒன்றாரியோவில் 8 வயது சிறுவனின் மரணம் குறித்து விசாரணை

ஒன்றாரியோவில் எட்டு வயதான சிறுவன் ஒருவின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒன்றாரியோவின் கேம்ரிட்ஜ் பகுதியில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாட்டார்லூ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுவன் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Annachi News

Related post