பெட்ரோல் நிலையங்களில் கேன் மற்றும் போத்தல்களில் பெட்ரோல் வழங்குவதை இடைநிறுத்துவதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் நேரடியாக வாகனங்களிற்கு மாத்திரமே பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.