அவுஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் தொழில் கட்சி தலைவர் எண்டனி எல்பனீஸ் (Anthony Albanese )வெற்றி பெற்றுள்ளார்.
அவுஸ்;திரேலிய பிரதமரை தெரிவுச் செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று (21) நடைபெற்றது.
இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் எண்டனி எல்பனீஸ் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
வெற்றி பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் மத்தியிலேயே 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியது.
இதன் முலம எண்டனி எல்பனீஸ் வெற்றி அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளமை உறுதியாகியுள்ளது.
ஓரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.