டெல்லியை 5 விக்கெட் வித்தியசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.
இதனால் டெல்லி அணி பிளே ஓப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
எனவே புள்ளிகள் அடிப்படையில் பிளே ஓப் சுற்றுக்குள் 4-வது அணியாக RCB நுழைந்தது.
இதற்கமைய முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் (GT) , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் (RCB) மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
25 ஆம் திகதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் (LSG) ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் (RCB) மோதுகின்றன.
இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
27 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் 2வது தகுதிச்சுற்றில், முதல் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
29 ஆம் திகதி நடைபெறும் இறுதிச்சுற்றில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.