மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல்

இந்திய கடன் உதவியின் கீழ் மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

எரிபொருளை ஏற்றிச் வந்த கப்பல் நேற்று (21) பிற்பகல் நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், டீசல் மற்றும் சுப்பர் டீசல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பது பிரச்சினையாக உள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Jesudasan

Related post