ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கடும் புயல்: 4 பேர் பலி

கனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று (21) இரவு வீசிய கடும் புயல்: காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் பல வீடகளுக்கான மின் சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அத்தடன் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயல், மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

Jesudasan

Related post