கனடாவில் புயல் தாக்கத்தில் சிக்கி 5 பேர் பலி

கனடாவில் புயல் தாக்கத்தினால் இதுவரையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கியூபெக் மற்றும் ஒன்றாரியோவில் புயல் காரணமாக இவ்வாறு உயிரிழப்புக்களும் பாரியளவு பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

படகு கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மரணங்கள் பெரும்பாலும் மரம் முறிந்து வீழ்ந்ததில் சம்பவித்துள்ளன.

பிரம்டன், ஒட்டாவா, வாட்டர்லூ, மடவஸ்கா உள்ளிட்ட சில பகுதிகளில் இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஒன்றாரியொவில் நான்கு மரணங்களும், கியூபெக்கில் ஒரு மரணமும் சம்பவித்துள்ளன.

புயல் காற்று தாக்கம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பயனர்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பாரியளவில் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.

Annachi News

Related post