றொரன்டோ வாகன விபத்தில் சாரதி பலி

றொரன்டோவின் Beaches இல் வாகனமொன்று வீடு ஒன்றில் மோதியதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வாகன விபத்துச் சம்பவத்தில் வாகனத்தைச் செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குயின்ஸ் வீதி மற்றும் கிங்ஸ்வுட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீடு ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வாகனம் மோதுண்டதாகவும், இதனால் குறித்த குடியிருப்பு தொகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Annachi News

Related post