வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தல் தங்கம் 466.62 கிராம்

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தல் தங்கம் வருகிறது என்ற அடிப்படையில் எல்லை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஐ.சி.பி. பெட்ராபோல் பகுதியில் வந்த லாரியை மடக்கினர்.

அதில் ஓட்டுனரின் இருக்கைக்கு பின்னால், கருப்பு துணியால் மூடியிருந்த பெரிய பொட்டலம் ஒன்றில் 70 தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. 3 தங்க கட்டிகளும் இருந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 98 லட்சத்து 54 ஆயிரத்து 165 ஆகும்.

இதனை தொடர்ந்து அனைத்து தங்க பிஸ்கெட்டுகள், தங்க கட்டிகள் மற்றும் லாரியை படையினர் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுனரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த ஓட்டுனர் ராஜ் மண்டல் (வயது 26).

பங்காவன் நகரின் ஜாய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலில் இந்தியரான சகாபுதீன் மண்டல் என்பவருக்கு மறைமுக தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மனு தாக்கல் இதேபோன்று, வழக்கம்போல் ஜெயந்திப்பூர் சோதனை சாவடி பகுதியில் படையினர் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த நபரிடம் சோதனை நடத்தப்பட்டது.

அதில், 466.62 கிராம் எடை கொண்ட 4 தங்க பிஸ்கெட்டுகளை படையினர் கைப்பற்றினர். அந்த நபர் மரூப் மண்டல் (வயது 36) என தெரிய வந்துள்ளது. இந்தியரான அவர் எல்லைக்கு அந்த பக்கம் வசித்து வந்துள்ளார்.

வங்காளதேசத்தின் ஜெஸ்சூர் மாவட்டத்தில் உள்ள பப்லு மண்டல் என்பவரிடம் இருந்து தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி கொண்டு வந்துள்ளார். அதனை ஹபீசுல் ஷேக் என்பவரிடம் ஒப்படைக்க இருந்த நிலையில், பி.எஸ்.எப். வீரர்கள், சோதனையில் தடுத்து நிறுத்தி அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளுடன், பெட்ராபோல் சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.15 கோடி ஆகும்.

Annachi News

Related post