குழாய் நீர் குறித்து தேவையற்ற அச்சப்பட வேண்டிய அவசியமில்லை

,
இலங்கையில் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் குழாய் நீர் வழங்கப்படுவதில்லை என வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்த நாட்களில் குடிநீர் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறன. தற்போதைய பொருளாதார சூழலில் தண்ணீரை சுத்திகரிக்கும் இரசாயனங்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் இதனால் குடிப்பதற்கு ஏற்ற குழாய் நீர் வழங்கப்படுவதில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தண்ணீரை சுத்திகரிக்க தேவையான இரசாயனங்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்படவில்லை என சபையின் உதவி பொது முகாமையாளர் ஜெயலால் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் குழாய் நீரின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, குழாய் நீர் குறித்து தேவையற்ற அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Annachi News

Related post