21 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் : அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும்

21 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

திருத்த யோசனை தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் இவ்வாரம் கலந்துரையாடி அவர்களின் யோசனைகளையும் உள்வாங்கிதாக இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்குடன் புதிய மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்தத் திருத்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.

வன்முறைகளைப் புறந்தள்ளி, பயம், சந்தேகம் இன்றி வாழ்வதற்கான சூழல் 21ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் கிடைக்கும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்..

Jesudasan

Related post