வெளியூர் சென்ற வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க சிறப்பு முகாம்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விகிதத்தை சரிசெய்ய இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சராசரி மக்கள்தொகை விகிதம் 75 சதவீதத்திற்கு மேல் இருக்கும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் வீதத்தை சரிசெய்ய இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி வாக்காளர் விகிதத்தை சரிசெய்ய இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வருகிற 28-ந் திகதி (சனிக்கிழமை) மற்றும் வருகிற ஜூன் மாதம் 4-ந் திகதி ஆகிய இரண்டு நாட்களில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று படிவம் 7 பெறப்பட உள்ளது.

இதனை ஒன்றிய, நகர நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பயன்படுத்தி இறந்த, நிரந்தரமாக வெளியூர் சென்ற வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க சிறப்பு முகாம்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Annachi News

Related post