2 ஆவது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது RCB

பெங்களூரு அணி (RCB) 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.

ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG() பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ் (RCB) அணிகள் மோதின.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய RCB அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பக்கு 207 ஓட்டங்களைப் பெற்றது.

இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

அவர் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

208 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி (LSG) 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

இதனால் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.

இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய லக்னோ அணி 4வது இடத்தை தக்கவைத்தது.

எனவே ஆமதாபாத்தில் 27 திகதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் (RR) அணியுடன் பெங்களூரு அணி (RCB) மோதும்.

இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Jesudasan

Related post