நயன் + விக்னேஷ் சிவன் = டும் டும் டும்

தமிழ் திரையுலக பிரபல நடிகை நயன்தாராவை நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் விக்னேஷ் சிவன் கரம் பிடித்துள்ளார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 அளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் 200-க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது.

ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த கல்யாண விருந்து வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Jesudasan

Related post