ரஜினியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி


ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

இது ரஜினிக்கு 169-வது படம். கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடமும், நகைச்சுவை வேடத்துக்கு வடிவேலுவிடமும் பேசி வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை அணுகினர்.

இயக்குனர் நெல்சன் பெங்களூரு சென்று சிவ ராஜ்குமாரை சந்தித்து கதாபாத்திரம் குறித்து விளக்கினார். இந்த நிலையில் தற்போது ரஜினி படத்தில் நடிக்க இருப்பதை சிவராஜ்குமார் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் கூறும்போது, “கதை, கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரஜினியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியுடன் நடிப்பதை எல்லோருமே சிறந்த வாய்ப்பாகவே கருதுவார்கள். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. சிறுவயதில் இருந்தே ரஜினி என்னை அறிவார்.

ரஜினியும், நானும் திரையில் ஒன்றாக நடிப்பதை ரசிகர்களும் விரும்புவார்கள். ரஜினியுடன் நான் நடிக்கும் காட்சிகள் பெங்களூரு அல்லது மைசூரில் படமாக்கப்படும்” என்றார்.

Annachi News

Related post