மன்னார் நொச்சிக்குளத்தில் வாள்வெட்டு: இருவர் மரணம்

மன்னார்  நொச்சிக்குளம் பகுதியில் இன்று (10) காலை  இடம் பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட  முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் என்று தெரியவந்துள்ளது.

சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Jesudasan

Related post