ஏழுமலையான் கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோலாகல திருமணம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர் . சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.

திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள் நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் பங்கேற்கின்றனர் .

Annachi News

Related post