சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
ஒருவர் மூலம் மற்ற அனைவருக்கும் தொற்று பரவியது தெரிய வந்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.