வோகன் வாகன விபத்தில் மூதாட்டி பலி

வோகனில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூதாட்டியொருவர் பலியாகியுள்ளார்.

Woodstream Boulevard  பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன தரிப்பிடத்தில் 80 வயதான பெண் ஒருவர், இவ்வாறு மோதுண்டுள்ளார்.

வாகனத்தில் மோதுண்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Annachi News

Related post