பங்காளதேசின் வடகிழக்கு பகுதிகளில் வெள்ளம்,இதுவரை 41 பேர் பலி

பங்காளதேசின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழைக் காரணமாக இதுவரை சிறுவர்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கன மழையால் சுமார் பல இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக, சில்ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் ஆகிய இரு மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இரு மாவட்டங்களிலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Jesudasan

Related post