கனடாவில் ஆளணி வளப்பற்றாக்குறை

அனுபவம் இல்லாதவர்களை பணிக்கு அமர்த்த கனேடிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடாவில் நிலவி வரும் ஊழியப் படை பற்றாக்குறையினால் இவ்வாறு தொழில் தகைமை, அனுபவம், கல்வி தகமை என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பல்வேறு நிறுவனங்கள் பணியாளர்கள் புதிய விடயங்களை கற்றுக் கொள்ள காட்டும் ஆர்வத்தை முன்னிலைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Annachi News

Related post