இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? கடும் போட்டி

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்காக அரசியல் கட்சிகள் கடும் தீவிரம் காட்டி வருகின்றன.

தற்போiதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.

எனவே அடுத்த ஜனாதிபதி ஜூலை மாதம் 25 ஆம் திகதி பதவி ஏற்க வேண்டும்.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டுள்ளார்.

Jesudasan

Related post