“மகிழ்ச்சி”: C.Asalanka

நேற்றைய போட்டியில் சதத்துடன் வெற்றி பெற்றமை உத்வேகத்துடன், மகிழ்ச்சி அளிப்பதாக ச்சரித் அசலங்க (Charith Asalanka) தெரிவித்துள்ளார்.

போட்டியில் வெற்றிப் பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Charith Asalanka: (மிக்க மகிழ்சியாகவுள்ளது. அவுஸ்திரேலியா ஒரு பலமான அணியாகும். நாம் எழுந்து வரும் அணியாக நேற்றைய வெற்றி மகிழ்சியாகவுள்ளது. தலைவர் தசுன் ச்சானக்க அணி வீரர்களை பயன்படுத்தும் விதம் வித்தியாசமானது. அணியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளனர்) என்றார்.

இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த ச்சரித் அசலங்க 110 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு வித்திட்டார்.

அவரே போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானமை குறிப்பிடதக்கது.

Jesudasan

Related post