மெக்ஸிக்கோவில் சடலமாக மீட்கப்பட்ட கனேடியர்கள்

மெக்ஸிக்கோவில் இரண்டு கனேடியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெக்ஸிக்கோவின் கரையோர சுற்றுலாத் தளமான Playa del Carmen பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் ஏற்கனவே வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கியூபெக்கைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Annachi News

Related post