பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பற்காகவே அந்த அணி இலங்கைக்கு வரவுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு வரவுள்ளது.
அடுத்த மாதம் 16 ஆம் திகதி காலி மைதானத்தில் முதல் டெஸ்ட் இடம்பெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் அடுத்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது