புடின், மைத்திரிக்கு எழுதிய பதில்


ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி புடினுக்கு, மைத்திரி அனுப்பிய கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் யூரி மெடரி முன்னாள் ஜனாதிபதியிடம் நேற்று கையளித்துள்ளார்.

இதில் எரிபொருள் நெருக்கடி மற்றும் உர பிரச்சினைகளுக்கு முடியுமான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக புடின் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மைத்திரி விரைவில் சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Jesudasan

Related post