“நன்றியுள்ள தேசமாக ஒன்றிணைவோம்”

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ODI தொடரின் நாளைய (24) இறுதி ஒருநாள் போட்டியை காண வரும் ரசிகர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த அவுஸ்திரேலிய அணியை கௌரவப்படுத்தி நன்றி தெரிவிக்கவே இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யோசனை தொடர்பான பிரச்சாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

எனவே இதன்மூலம் நாளைய தினம் உலக மக்களின் கவனத்தை எமது சிறிய நாட்டின் பக்கம் திருப்புவோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

உலகின் ஏனைய நாட்டு அணிகள் இலங்கைக்கு செல்வதை தவிர்த்து வந்த சூழலில் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வந்துள்ளமை வரவேற்க கூடியது என இலங்கை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கையணி 3-1 என கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் நாளைய (24) போட்டி கொழும்ப ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்மை குறிப்பிடதக்கது.

இதேவேளை நாளைய போட்டிக்கான சகல நுழைவுச் சீட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Jesudasan

Related post