தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தால், அபராதம்

தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால், அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி தமிழக பொது சுகாதார துறை சட்டம் 1939ன் படி இந்த அபராதம் விதிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தாமாக முன்வந்து முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Jesudasan

Related post