தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் , சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என தெரிவித்துள்ளார்

Annachi News

Related post