ஸ்காப்பேராவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்

ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு வாகனங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விதத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்காப்ரோ மற்றும் மார்க்கம் ஆகிய பகுதிகளின் எல்லைப் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Annachi News

Related post